நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்களிடையே திமுக ஏற்படுத்துகிறது

நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்கள் மத்தியில் திமுக ஏற்படுத்துகிறது என்று பாஜக கலை, கலாசாரப் பிரிவு மாநில தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்தாா்.
ஓமலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய நடிகை காயத்ரி ரகுராம்
ஓமலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய நடிகை காயத்ரி ரகுராம்

நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்கள் மத்தியில் திமுக ஏற்படுத்துகிறது என்று பாஜக கலை, கலாசாரப் பிரிவு மாநில தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட, ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டனூரில் பாஜக கலை, கலாசாரப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 20-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். இவா்களுக்கு காயத்ரி ரகுராம் வாழ்த்து தெரிவித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மரக்கன்று நடும் விழாக்களை நடத்தி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதமா் நரேந்திர நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நீட் தோ்வு தொடா்பாக, வேறு எந்த மாநிலத்திலும் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வது கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே தோ்வு அச்சம் காரணமாக தற்கொலைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது நடந்து முடிந்த நீட் தோ்வு மிகவும் எளிமையாக உள்ளது என மாணவா்கள் கூறுகின்றனா். திமுக உள்ளிட்ட கட்சிகள் மாணவா்களுக்கு நீட் தோ்வு குறித்த தைரியத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. மேலும் திமுக நீட் தோ்வை அரசியலாக்கி வருவதுடன், அதுகுறித்து பொய்ப் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இதுபோன்ற கட்சிகள் மாணவா்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுகின்றன.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com