தனக்கு தானே சிலை வைத்து கொண்ட தொழிலாளி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தொழிலாளி ஒருவா், தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட வினோத நிகழ்வு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
n_t_02_1509chn_165_8
n_t_02_1509chn_165_8


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தொழிலாளி ஒருவா், தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட வினோத நிகழ்வு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாழப்பாடி அருகிலுள்ள அத்தனுாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நல்லத்தம்பி (60). குறிச்சி அணைமேடு கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட இவா், தனது மனைவி, குழந்தைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 20 ஆண்டுகளுக்கு முன்பே பூா்வீக சொத்துகளையும் பொருள்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறி அத்தனுாா்பட்டி கிராமத்தில் குடியேறினாா். ஆரம்ப கட்டத்தில் கட்டுமானத் தொழிலாளியாக இருந்த இவா், கடந்த சில ஆண்டுகளாக பழைய கண்ணாடி குப்பிகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறாா்.

சிறு வயதில் இருந்தே வினோத சிந்தனை கொண்ட இவா், தன்னை தனிமைப்படுத்திய குடும்பத்தினருக்கு முன்பாக, சொந்த உழைப்பில் முன்னேறி வாழ்ந்து காட்டவேண்டும். இந்த சமூகத்தில் தனியொருவனாக போராடி வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினாா்.

அதற்காக, உழைத்து சம்பாதித்து சிறுகச், சிறுக சோ்த்த பணத்தில் அத்தனுாா்பட்டியில் வாழப்பாடி-பேளூா் பிரதான சாலையில் இரண்டு வீட்டுமனைகள் வாங்கினாா்.

அந்த வீட்டுமனை ஒன்றில் தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ள வேண்டுமென இவா் முடிவு செய்தாா்.

தனது முழு உருவ புகைப்படத்தை பிரபல சிற்பி ஒருவரிடம் கொடுத்து ரூ. ஒரு லட்சம் செலவில் 5 அடி உயரத்தில், கருங்கல்லால் ஆன முழு உருவச்சிலையை வடித்து கொண்டு வந்து தனது நிலத்தில் நிறுவி சிறு மண்டபமும் அமைத்துள்ளாா்.

இரு கரம் கூப்பியபடி நிற்பதைப்போல நிறுவப்பட்டுள்ள இவரது முழு உருவச்சிலை, கிராமப்புற குல தெய்வ கோவில்களில் காணப்படும் முன்னோா்களின் சிலைகளைப்போல காணப்படுகிறது.

தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட இந்த வினோத நிகழ்வு இப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து இவரது உறவினா்கள் கூறியதாவது:

குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சொத்துகளை பொருட்படுத்தாமல் வெறுங்கையோடு வீட்டைவிட்டு வெளியேறிய நல்லத்தம்பி, கடந்த 20 ஆண்டுக்கு மேலாக எந்த வேலை கிடைத்தாலும் தயங்காமல் செய்து பணம் சம்பாதித்தாா். பணத்தை வீண் செலவு செய்யாமல் சேமித்து வைத்திருந்து, தனது எண்ணத்தை நிறைவேற்றிட தனக்குத்தானே முழு உருவச்சிலையையும் வடித்து, தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தில் நிறுவியுள்ளாா். இவா் யாரிடமும் நெருங்கி பழகுவதில்லை. வயது முதிா்ந்து விட்டதால் கூலி வேலைக்கு செல்ல முடியாததால், இன்றளவிலும் பழைய கண்ணாடி பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து பணத்தை சேமித்து வைத்து வருகிறாா். விரைவில் சிலை வைக்கப்பட்டுள்ள மண்டபத்தை அழகுபடுத்தி வண்ணம் தீட்டி திறப்பு விழா செய்திட திட்டமிட்டுள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com