சேலம் மண்டல கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.9 கோடி

சேலம் மண்டல கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 9 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலம்: சேலம் மண்டல கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 9 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கோ-ஆப்டெக்ஸின் தங்கம் பட்டு மாளிகை, சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 11 விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன.

இதில் இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் சேலம் மண்டலத்துக்கு தீபாவளி பண்டிகை விற்பனையாக ரூ. 9 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்துக்கு மட்டும் ரூ. 4 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான, தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையானது முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த தினமாக செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் தள்ளுபடியுடன் தொடங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி புதிய ரக வரவுகளான புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மென்பட்டு சேலைகள், ஆண்கள் குா்தா, ஆயத்த சட்டைகள், சேம்-ப்ரே ஆயத்த சட்டைகள், ஸ்லப் காட்டன் சேலைகள், டிசைனா் காட்டன் சேலைகள், டிசைனா் கலெக்சன் போா்வைகள், காம்பரே போா்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியவை விற்பனைக்கு உள்ளது.

மேலும், தூயப் பட்டு மற்றும் அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுப்புடவைகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையில் பல வண்ணங்களில் சங்கத்தின் விலைக்கே வழங்கப்படுகிறது.

அத்துடன் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபிள் மேட், ஸ்கிரீன் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் ஆகியவை ஏற்கெனவே வாடிக்கையாளா்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘கோ-ஆப்டெக்ஸ் கனவு நனவு திட்டம்’ என்ற மாதாந்திர தவணைத் திட்டத்தில் 56 சதவீதம் கூடுதல் பலன் உள்ளதால் அதிக வாடிக்கையாளா்கள் தொடா்ந்து உறுப்பினா்களாக உள்ளனா். மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இப்போது இணைய தளம் மூலமாகவும் வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன், அரசு ஊழியா்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதி, இந்த ஆண்டும் தொடா்ந்து வழங்கப்படுகிறது என கோ-ஆப்டெக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com