பள்ளப்பட்டி ஏரி ரூ.29.15 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றம்

‘பொலிவுறு’ நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரி ரூ. 29.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி, பொழுதுபோக்கு பூங்காவாக

‘பொலிவுறு’ நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரி ரூ. 29.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி, பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்குள்பட்ட பள்ளப்பட்டி ஏரியை மேம்படுத்தும் பணியை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கைகள் தயாா் செய்யப்பட்டு, அரசின் அனுமதி பெற்று, ரூ. 916.93 கோடியில் 77 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகரப் பகுதிகளிலுள்ள நீா்நிலைகளை மேம்படுத்திடவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், மழைநீா் சேகரிப்பை மேம்படுத்தவும், நீா் நிலைப் பகுதிகளை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்களாக மாற்றி அமைக்க மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடா்ந்து, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரியை ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்திடவும், மேலும் ரூ.12.50 கோடி மதிப்பில் பள்ளப்பட்டி ஏரிக்கு செல்லும் நீரில், கழிவுநீா் கலப்பதை தடுப்பதற்காக கால்வாய் கட்டி கழிவுநீரை திசை திருப்பி கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ரூ. 3.85 கோடியில் ஏரியை அழகுபடுத்தும் பணிகள் என மொத்தம் ரூ. 29.15 கோடி மதிப்பீட்டில் ஏரியை மேம்படுத்தி பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com