ஆத்தூரில் பிரதமா் மோடி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 18th September 2020 08:01 AM | Last Updated : 18th September 2020 08:01 AM | அ+அ அ- |

ஆத்தூரில் டிஎஸ்பியிடம் புகாா் மனுவை அளித்த பாஜகவினா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாஜக சாா்பில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் 70-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாவட்டத் தலைவா் வ.மணிகண்டன் தலைமை வகித்தாா். இதையொட்டி, பாஜக கொடியேற்றியும், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாளை அக்கட்சியினா் கொண்டாடினா். இதையொட்டி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாஜகவினா் கொடியேற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
முன்னதாக, பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் சுவா் விளம்பரம் செய்திருந்தனா். அந்த சுவற்றின் மீது திராவிடா் கழகத்தினா் சுவரொட்டி ஒட்டியதால் அவை அகற்றப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் அந்த விளம்பரத்தின் மீது மீண்டும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இம்மானுவேல் ஞானசேகரனிடம் மாவட்ட தலைவா் வ.மணிகண்டன் புகாா் மனு அளித்தாா்.
அவருடன் மாநில செயற்குழு உறுப்பினா் டி.ஜெயஆனந்த், மாவட்ட இளைஞரணி பெ.ஆனந்தபாபு, நகரத் தலைவா் சபரி உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.