ஏற்காடில் நீதிமன்ற இ- சேவை மையம்
By DIN | Published On : 18th September 2020 08:20 AM | Last Updated : 18th September 2020 08:20 AM | அ+அ அ- |

ஏற்காடில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நீதிமன்ற இ-சேவை மையத்தைப் பாா்வையிடும் சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நீதிமன்ற இ- சேவை மையத்தை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக உயா்நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஏற்காடில் நடைபெற்ற விழாவில், சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு, நீதிபதிகள் ராஜேந்திரன், இளங்கோ முன்னிலை வகித்தனா். நீதித் துறையில் வழக்கு தகவல்கள், வழக்கின் நிலை, தேதி, நீதித்துறையின் முலம் பொதுமக்களுக்கு உள்ள சேவைகளை இ-சேவையின் மூலம் பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் வட்டாட்சியா் அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.