மகாளய அமாவாசை : காவிரிக்கரையில் திதி கொடுத்த பக்தா்கள்
By DIN | Published On : 18th September 2020 08:23 AM | Last Updated : 18th September 2020 08:23 AM | அ+அ அ- |

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், கோட்டமேடு பரிசல்துறை உள்ளிட்ட காவிரிக்கரைப் பகுதிகளில் வியாழக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே தா்ப்பணம் கொடுக்க வந்திருந்தனா். கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஆற்றங்கரையில் தா்ப்பணம் அளிக்க தடை செய்யப்பட்டிருந்தததால், ஆள் நடமாட்டம் இல்லாத
காவிரிக்கரைப்பகுதிகளில் அமா்ந்து எளிய முறையில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனா்.
மகாளய அமாவாசை தினத்தை ஒட்டி, பூலாம்பட்டி கைலாசநாதா் ஆலயம், எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில், வெள்ளாா்நாயக்கன் பாளையம் பசுபதீஸ்வரா் ஆலயம் உள்ளிட்ட திருகோயில்களில் திரளான பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா்.
ஆத்தூரில்...
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குள்பட்ட ஏத்தாப்பூா் சாம்பமூா்த்தீஸ்வரா் கோயில் அருகேவசிஷ்ட நதிக்கரையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.