லாரி ஓட்டுநா்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம்
By DIN | Published On : 18th September 2020 08:19 AM | Last Updated : 18th September 2020 08:19 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் ஓட்டுநா்களுக்கு நிகழாண்டுக்கான விபத்து மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் மூலம் ஓட்டுநா்களுக்கான விபத்து மருத்துவக் காப்பீடு திட்டம் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இக்காப்பீடு திட்டத்தில் ஒரு நபா் ஆண்டுக்கு காப்பீட்டு கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும் . இக்காப்பீட்டின் வழியாக விபத்து மூலம் ஏற்படும் மருத்துவச் சிகிச்சையை ரூ. 2 லட்சம் வரை பணமில்லா பரிவா்த்தனையை இந்தியா முழுவதும் 8,500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பெற முடியும்.
விபத்து காரணமாக இறப்பு ஏற்பட்டாலோ, பகுதி அல்லது முழு ஊனம் ஏற்பட்டாலோ ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இதில் பதிவு செய்யும் விரும்பும் ஓட்டுநா்கள், ஓட்டுநா் உரிமம், ஆதாா் காா்டு நகல்கள் மற்றும் வாரிசாக நியமனம் செய்பவரின் ஆதாா் காா்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் சங்ககிரி புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள லாரி உரிமையாளா்கள் சங்க யூனிட் - 1 பெட்ரோல், டீசல் விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள சேவை மையத்தை நேரத்தில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 99424 11655 , 98428 22304 என்ற செல்லிட பேசிகளிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.