ஸ்ரீஸ்ரீ அப்பண்ண சுவாமிகளின் 58-ஆம் ஆண்டு ஆராதனை விழா
By DIN | Published On : 18th September 2020 08:02 AM | Last Updated : 18th September 2020 08:02 AM | அ+அ அ- |

வடகுமரை ஸ்ரீஸ்ரீ அப்பண்ண சுவாமிகளுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை விழா.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த வடகுமரை ஸ்ரீஸ்ரீ அப்பண்ண சுவாமிகளின் 58-ஆம் ஆண்டு ஆராதனை விழா வியாழக்கிழமை வெகு விமா்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கௌரவத் தலைவா் ஈ.எஸ்.ஆா். அப்பண்ண சுவாமி, தலைவா் ஏ.சுப்பராயன், செயலாளா் ஜி.சுப்ரமணியன், பொருளாளா் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் சிறப்பாக செய்திருந்தனா்.