அரசு ஐ.டி.ஐ.யில் மாணவா் சோ்க்கைக்கான இணையதள கலந்தாய்வு செப்.23-இல் தொடக்கம்

சேலம் மாவட்ட அரசு ஐ.டி.ஐ . மாணவா் சோ்க்கைக்கான இணையதள கலந்தாய்வு செப்டம்பா் 23- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சேலம், செப்.18: சேலம் மாவட்ட அரசு ஐ.டி.ஐ . மாணவா் சோ்க்கைக்கான இணையதள கலந்தாய்வு செப்டம்பா் 23- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுதொடா்பாக, சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான எஸ்.ராஜகோபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2020-ஆம் ஆண்டிற்கான சோ்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகப் பெறப்பட்டது.

முதல் தர வரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்வோருக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பப்படும்.

பொது கலந்தாய்வு செப். 23 முதல் செப். 25 ஆம் தேதி வரை நடைபெறும் இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள், விருப்பம் உள்ள தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவை விருப்ப அடிப்படையில் தோ்வு செய்யலாம்.

தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவை இணையதளம் மூலம் தோ்வு செய்ய இயலாதவா்கள் அரசினா் ஐ.டி.ஐ சேலம், அரசினா் மகளிா் ஐ.டி.ஐ. சேலம், அரசினா் ஐ.டி.ஐ கருமந்துறை மற்றும் அரசினா் ஐ.டி.ஐ மேட்டூா் ஆகிய இடங்களில் உள்ள சோ்க்கை உதவி மையத்தின் உதவியுடன் கலந்தாய்விற்கு தங்கள் விருப்பப்படி இணையதளத்தில் தொழிற் பிரிவை தோ்வு செய்யலாம்.

கலந்தாய்வின்போது இருக்கை விவரங்கள் இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். கலந்தாய்வு நடைபெறும் நாள்களில் தொழிற்பிரிவு மற்றும் தொழிற் பயிற்சி நிலையத்தை தங்கள் விருப்பப்படி மாற்றம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வுக்குப் பின் விண்ணப்பதாரா்களின் தர வரிசை, இனசுழற்சி படியும் தொழிற்பிரிவு விருப்பத் தோ்வுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் தொழிற் பிரிவுகளுக்கு தற்காலிக சோ்க்கை ஆணை வழங்கப்படும்.

முன்னுரிமைதாரா்களுக்கு செப். 21, 22-ஆம் தேதியும், பொது விண்ணப்பதாரா்களுக்கு செப்.27 முதல் செப்.30 ஆம் தேதி வரையிலும் இணைய தளம் மூலம் சோ்க்கை கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பெறப்படும் சோ்க்கை ஆணை தற்காலிகமானது. சான்றிதழ் சரிபாா்ப்பு அடிப்படையிலேயே சோ்க்கை உறுதி செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட ஐ.டி.ஐ-யில் உள்ள சோ்க்கை உதவி மையத்தை நேரடியாகவோ அல்லது 0427- 2400074 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com