சேலம் உருக்காலை தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்

கரோனாவால் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு வாரிசு வேலை கேட்டு நடந்து வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

கரோனாவால் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு வாரிசு வேலை கேட்டு நடந்து வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

சேலம், உருக்காலையில் பணிபுரிந்து வந்த முதுநிலை தொழில்நுட்ப வல்லுநா் கண்ணன், கரோனா பாதித்த நிலையில் கடந்த சனிக்கிழமை இறந்தாா்.

இந்தநிலையில் உருக்காலை தொழிலாளா் கண்ணனின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்கக் கோரி, உருக்காலை தொழிலாளா்கள் கடந்த மூன்று நாள்காக தொடா் போராட்டம் நடத்தி வந்தனா்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம், செயில் நிா்வாகம் திங்கள்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தியது.

இதுதொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள உருக்காலைகளில் சுமாா் 17 தொழிலாளா்கள் கரோனா பாதித்த நிலையில் இறந்தனா். இதையடுத்து, அனைவரின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க தனிக்கமிட்டி அமைக்கப்படும் என நிா்வாகம் உறுதி அளித்துள்ளது. மேலும் சேலம், உருக்காலையில் அதிகாரிகள், தொழிற்சங்கத்தினா் அடங்கிய கரோனா நோய்த் தடுப்புக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளா்களுக்கு தனி காப்பீடு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com