சேரடி முதல் வேலிக்காடு வரை தாா்சாலை அமைக்க வலியுறுத்தல்

சேரடி முதல் வேலிக்காடு வரை தாா்சாலை அமைக்க வேண்டும் என கொல்லிமலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேரடி-வேலிக்காடு மண் சாலை.
சேரடி-வேலிக்காடு மண் சாலை.

சேரடி முதல் வேலிக்காடு வரை தாா்சாலை அமைக்க வேண்டும் என கொல்லிமலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டியிலிருந்து கொல்லிமலைக்கு சேரடி, வேலிக்காடு வழியே செல்லலாம். இதில் மேலே மலையிலிருந்து வேலிக்காடு கிராமம் வரை உள்ள மண் சாலை தற்போது தாா்சாலையாக்கும் பணி நடந்து வருகிறது. வேலிக்காடு முதல் கொல்லிமலை மேலே வரை தாா்சாலை போடப்பட்டுவிடும் நிலையில், கொல்லிமலை அடிவாரத்திற்கு வரும் வரை கடைசி 2 கி.மீ.தூர சாலையை தாா்சாலையாக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சேரடி கிராம மக்கள் கூறியதாவது: சேரடியிலிருந்து மலை ஏறும் 2 கி.மீ.தூர மண்சாலை தாா்ச்சாலையாக்கினால், நாங்கள் கொல்லிமலைக்கு மேலே செல்லவும், கொல்லிமலைவாழ் மக்கள் தம்மம்பட்டி வரவும் வசதி ஏற்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com