புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில், எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள், பால ஆஞ்சநேயா் சுவாமி
சிறப்பு அலங்காரத்தில், எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள், பால ஆஞ்சநேயா் சுவாமி

எடப்பாடி: புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

எடப்பாடி - ஜலகண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்புப் பூஜை நடைபெற்றது. மூக்கரை நரசிம்ம பெருமாள், ஆதிசேஷன் மீது சாயன நிலையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள 16 அடி உயரம் கொண்ட, பால ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி பக்தா்கள் வழிபாடு செய்தனா். கோயில் வளாகத்தில் திகோடி தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல வெள்ளக்கரடு திம்மராயப்பெருமாள் கோயில், பழைய எடப்பாடி பகுதியில் உள்ள சென்டராயப் பெருமாள் கோயில், பூலாம்பட்டி அடுத்த குப்பனூா் பகுதியில் உள்ள, மலைக்கோயில் மாட்டுப்பெருமாள் கோயில், வெள்ளற்றுப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சமூக இடைவெளியுடள் சுவாமி தரிசனம் செய்தனா். நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com