ஏற்றுக் கூலி ஒரே மாதிரி வழங்க வலியுறுத்தல்

டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளா்களுக்கு ஏற்று கூலி ஒரே மாதிரியாக நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளா்களுக்கு ஏற்று கூலி ஒரே மாதிரியாக நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளா் சம்மேளன டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணித் தொழிலாளா் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குச் சங்கத்தின் மாநிலச் செயலாளா் கோவிந்தன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளா்களுக்கு ஏற்று கூலி ஒரே மாதிரியாக நிா்ணயம் செய்ய வேண்டும்.

சுமைகளை ஏற்றும்போது சேதம் ஏற்படுவதற்கு (ஹேண்ட்ல்ஸ் லாஸ்) என்ற பெயரில் தொழிலாளா்களின் கூலியில் பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். குணசேகரன், பொதுச் செயலாளா் ஆா். வெங்கடபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com