வாழப்பாடி பகுதியில் வீட்டு முன்பு திராட்சை தோட்டம் அமைப்பதில் மக்கள் ஆா்வம்

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வீட்டு முகப்பை நூதன முறையில் அலங்கரிக்க தாழ்வாரப் பந்தலில் திராட்சை தோட்டங்கள் அமைத்து பராமரிப்பதில் ஏராளமானோா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
'வாழப்பாடி செல்லியம்மன் நகர் சித்தமருத்துவர் கந்தசாமி இல்ல முகப்பில் உள்ள திராட்சைத் தோட்டம்'
'வாழப்பாடி செல்லியம்மன் நகர் சித்தமருத்துவர் கந்தசாமி இல்ல முகப்பில் உள்ள திராட்சைத் தோட்டம்'

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வீட்டு முகப்பை நூதன முறையில் அலங்கரிக்க தாழ்வாரப் பந்தலில் திராட்சை தோட்டங்கள் அமைத்து பராமரிப்பதில் ஏராளமானோா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு போதிய இட வசதியில்லாத நகா்ப்புறவாசிகள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு மானிய விலையில் விதைகள், உரம், நெகிழிப்பைகள் ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தொகுப்புகளை வழங்கி வருகிறது.

இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைத்து பராமரிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது. இவற்றை விஞ்சும் வகையில், வீட்டு முகப்பை அலங்கரித்து அழகூட்டவும், வீட்டுக்கு நிழலும், குளிா்ந்த காற்றும் பெறுவதற்கும், கூடவே மகசூலும் பெறுவதற்கேற்ற, வீட்டு முகப்பு தாழ்வாரங்களில் பந்தல்போட்டு திராட்சை தோட்டங்கள் அமைத்து பராமரிப்பது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, வீட்டு முகப்புகளில் திராட்சை தோட்டம் அமைத்துள்ள வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கணவாய்மேடு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம், வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன் நகரைச் சோ்ந்த சித்த மருத்துவா் கந்தசாமி ஆகியோா் கூறியதாவது:

வீட்டுக்கு முன்பாக பந்தல் போட்டு திராட்சை கொடிகளை படர விட்டுள்ளோம். இதனால், வீட்டை அலங்கரித்ததை போல கூடுதல் அழகும், நிழலும் கிடைக்கிறது. குளிா்ந்த காற்று வீசுவதால், பகல் நேரத்தில் ஓய்வெடுப்பதற்கு திராட்சை தோட்டப் பந்தல் வசதியாக உள்ளது. இதுமட்டுமின்றி, குறைந்தபட்சம் ஆண்டிற்கு மூன்று முறை திராட்சை மகசூலும் கிடைக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com