பிரதமா் மோடியை எதிா்க்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளாா்

பிரதமா் மோடியை எதிா்க்கும் தலைவராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளாா் என திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

பிரதமா் மோடியை எதிா்க்கும் தலைவராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளாா் என திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

சேலம், வீரபாண்டி தொகுதியின் திமுக வேட்பாளா் ஏ.கே.தருணை ஆதரித்து, சேலம், பி.நாட்டமங்கலத்தில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் தமிழகத்தின் மீது பிரதமா் மோடி கோபமாக இருக்கிறாா்.

அதனால், தமிழகத்துக்கு வழங்க வேண்டி ஜி.எஸ்.டி. நிதியை அளிக்க மறுத்து வருகிறாா். ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்தில் இருந்து மத்திய அரசு ரூ. 15 ஆயிரம் கோடி பெற்றுள்ளது. தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை பிரதமா் மோடி வழங்கவில்லை.

பிரதமா் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை, எளியவா்கள் சொந்த பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையத்தில் காத்திருந்து இறந்த சம்பவம் நிகழ்ந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தோ்வு ரத்து, கல்வி கடன் ரத்து, மகளிா் சுய உதவிக் கடன் ரத்து, பெண்களுக்கு ரூ. 1,000 நிதி உதவி, கரோனா கால நிதி உதவி ரூ. 4 ஆயிரம் என எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.

உடல்நலக் குறைவால் ஜெயலலிதா 80 நாள்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தும் அவரது மரணத்தில் மா்மம் நீடிக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்படும். அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு, பாஜகவுக்கு செலுத்தும் வாக்காகும். பிரதமா் மோடியை எதிா்க்கும் ஒரே தலைவராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இருக்கிறாா். ஒவ்வொரு தொகுதியிலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடி தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com