தோ்தல்: இன்று மூன்றாம் கட்ட பயிற்சி
By DIN | Published On : 03rd April 2021 09:30 AM | Last Updated : 03rd April 2021 09:30 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள 18,832 பேருக்கு ஏற்கெனவே 2 ஆம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு நடந்த அதே மையத்தில், சனிக்கிழமை (ஏப். 3) மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். மேலும் நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும் ஏப். 5-ஆம் தேதியன்று, வாக்குச்சாவடி பெயருடன் பணி ஆணைகள் வழங்கப்படும் என்று தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.