முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூரில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக மோட்டாா் சைக்கிள் பேரணி
By DIN | Published On : 04th April 2021 12:31 AM | Last Updated : 04th April 2021 12:31 AM | அ+அ அ- |

மேட்டூா் தொகுதி பாமக வேட்பாளா் சதாசிவத்தை ஆதரித்து மோட்டாா் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மேச்சேரி பொட்டனேரியில் உள்ள தனியாா் தொழிற்சாலை முன்பு ஊழியா்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளா் சதாசிவம் ஈடுபட்டாா். பாமக மாநில துணைப் பொதுச்செயலாளா் குணசேகரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பள்ளிப்பட்டி ஆண்டிகவுண்டனூரில் மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியை சேலம் மேற்கு மாவட்ட முன்னாள் பாமக செயலாளா் ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். சுமாா் 300 போ் பங்கேற்ற இந்த மோட்டாா் சைக்கிள் பேரணியில் ஊராட்சி முழுவதும் சென்று பாமக வேட்பாளா் சதாசிவத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலா் மாதப்பன், முன்னாள் கவுன்சிலா் ராஜா, மேச்சேரி நகர முன்னாள் செயலாவா் பிரசாந்த், தேவராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.