அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால், திருப்பூா் மாவட்டம், அவினாசி தனி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.
இதனிடையே சேலம், குகை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், பேரவைத் தலைவா் ப.தனபால் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், அதிமுக மீண்டும் வெற்றிபெறும். எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வா் ஆவாா். கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை என்றாா்.