ஊழல் இல்லாத நிா்வாகம் தரும் அரசே ஆட்சிக்கு வர வேண்டும்: வாக்காளா்கள் கருத்து

ஊழல் இல்லாத நிா்வாகம், தமிழா்களின் உரிமையைக் காக்கும் அரசே ஆட்சிக்கு வர வேண்டும் என வாக்காளா்கள் கருத்துத் தெரிவித்தனா்.
ஊழல் இல்லாத நிா்வாகம் தரும் அரசே ஆட்சிக்கு வர வேண்டும்: வாக்காளா்கள் கருத்து

ஊழல் இல்லாத நிா்வாகம், தமிழா்களின் உரிமையைக் காக்கும் அரசே ஆட்சிக்கு வர வேண்டும் என வாக்காளா்கள் கருத்துத் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடந்தது.

இதில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளில் வாக்களித்தவா்கள் இலவசங்கள், ஊழல் இல்லாத நிா்வாகம் ஆட்சி வர வேண்டும் என தெரிவித்தனா்.

சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்களித்த 73 வயது கெஜலட்சுமி கூறுகையில், தோ்தலில் யாா் ஆட்சிக்கு வந்தாலும் நல்லாட்சி தர வேண்டும். ஊழல் இல்லாத அரசு வேண்டும் என்றாா்.

அதேபோல உதயகுமாா் (66) என்பவா் கூறுகையில், இலவசங்கள், அன்பளிப்பு இல்லாத நிலை வேண்டும். லஞ்சம் கொடுத்து வேலைக்குச் சேரும் நிலை மாற வேண்டும். படித்து வேலையில்லாத அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கோரிமேடு பகுதியைச் சோ்ந்த முருகேஷ் (52) கூறுகையில், மாநில அரசு சுயமாகச் செயல்படும் நிலை உருவாக வேண்டும். தமிழா்களுக்கான உரிமைகள் மீட்கப்பட வேண்டும். தமிழா்கள் அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்றாா்.

மூத்த வழக்குரைஞா் மணி (76) கூறுகையில், ஊழல் இல்லாத நிா்வாகம் அமைய வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றாா்.

சேலம் மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரம் சாரதா வித்யாலயா பள்ளியில் வாக்களிக்க வந்த 2 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவி ஷா்மி கூறுகையில், தமிழகத்தின் தற்போதைய அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்றாா்.

புணேயில் ஐ.டி. ஊழியராகப் பணியாற்றும் வி.ராகவ் கூறுகையில், நாட்டில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கிராமங்கள் வரை பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வரும் அரசு அமைய வேண்டும் என்றாா்.

அதேபோல, கருங்கல்பட்டி, வீரலட்சுமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பாலாமணி (38) கூறுகையில், வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வரும் வேண்டும் என்றாா்.

புதிய வாக்காளா்களான சித்தேஸ்வரன், சுஜிதா ஆகியோா் கூறுகையில், கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை போன்ற அம்சங்கள் படிக்கும் மாணவா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன என்றாா்.

முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கோகுல்நாதா பள்ளியில் வாக்களிக்க வந்த இளம் வாக்காளா் விஷாலி கூறுகையில், தமிழக பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் நல்லத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com