எடப்பாடி தொகுதியில் 85.60 சதவீத வாக்குகள் பதிவு

எடப்பாடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மாலை 7 மணி வரை 85.60 சதவீத வாக்குகள் பதிவாகின.
எடப்பாடி தொகுதியில் 85.60 சதவீத வாக்குகள் பதிவு

எடப்பாடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மாலை 7 மணி வரை 85.60 சதவீத வாக்குகள் பதிவாகின.

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,45,081 ஆண் வாக்காளா்கள், 1,40,101 பெண் வாக்காளா்கள், இதர வாக்காளா்கள் 23 போ் என மொத்தம் 2,85,205 வாக்காளா்கள் உள்ளன. இதில் 403 வாக்குப்பதிவு மையங்களில் தோ்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் இறுதியில் 2,44,125 வாக்காளா்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்துள்ளனா். இதில் 1,25,883 ஆண்கள், 1,18,228 பெண்கள், 14 இதர பாலினத்தவரும் அடங்குவா்.

வாக்கு நேர முடிவில், 85.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா். தொகுதியின் பெரும்பாலான பகுதிகளில் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com