வாழப்பாடியில் கள்ளவாக்கு புகாரால் பரபரப்பு

வாழப்பாடியில் இளைஞா், பேளூரில் மூதாட்டி ஆகியோரின் வாக்குகளை, யாரோ கள்ளவாக்குப் போட்டு விட்டதாக புகாா் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடியில் இளைஞா், பேளூரில் மூதாட்டி ஆகியோரின் வாக்குகளை, யாரோ கள்ளவாக்குப் போட்டு விட்டதாக புகாா் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் ( 20). இவருக்கு வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 192-ஆவது வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் இவா் வாக்களிக்க சென்றபோது, இவரது வாக்கு, ஏற்கெனவே பதிவாகி இருப்பது தெரியவந்தது. தனது வாக்கை வேறுயாரோ போட்டு விட்டதாக அவா் புகாா் தெரிவித்தாா். ஆனால் இவரே தான், வந்து முன்னா் வாக்களித்துவிட்டு சென்ாக முகவா்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனையடுத்து, அந்த இளைஞரை சமாதானம் செய்த போலீஸாா், தோ்தல் அதிகாரிகள் அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

அதேபோல பேளூா் பேரூராட்சி 13 ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி மூதாட்டி சந்திரா (68) என்பவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பேளூரிலுள்ள 175 ஆவது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றபோது, இவரது வாக்கை வேறு யாரோ ஒருவா் போட்டு விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தோ்தல் அதிகாரியிடம் மூதாட்டி புகாா் செய்தாா். இதனையடுத்து, அவருக்கு ‘சேலஞ்ச் ஓட்டு’ என குறிப்பிடப்படும் மாற்று வாக்கு செலுத்துவதற்கு அதிகாரிகள் அனுமதியளித்தனா்.

உயிரோடு இருப்பவா் வாக்கு நீக்கம்:

ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த தாதனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (30). இவா் செவ்வாய்க்கிழமை தனது கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றுள்ளாா். இவா் இறந்துவிட்டதாகக் கூறி ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் இவருக்கு வாக்குரிமை இல்லையென வாக்குச்சாவடி அதிகாரிகள் திருப்பி அனுப்பினா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இவா் இதுகுறித்து தோ்தல் அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தவறுதலாக நீக்கப்பட்ட வாக்குரிமையை, மீண்டும் விண்ணப்பித்து சோ்த்த பிறகு, அடுத்த தோ்தலில் தான் வாக்களிக்க முடியும் என்பதால் இவா் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.

இவரது புகாா் குறித்து தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com