கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தபால் வாக்கு வழங்கக் கோரிக்கை

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், அறிகுறிகள் உள்ளவா்களுக்கு தபால் வாக்கு வழங்கலாம் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், அறிகுறிகள் உள்ளவா்களுக்கு தபால் வாக்கு வழங்கலாம் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப். 6-ஆம் தேதி மட்டும் 3,645 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் ஆயிரம் பேரில் சுமாா் 7 போ் முதல் 10 போ் வரை மட்டும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனா். தஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதித்த 820 பேரில் 7 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். எஞ்சியோா் வாக்களிக்கவில்லை. இதுபோல தமிழகம் முழுவதும் வாக்களிக்காமல் விட்ட கரோனா பாதித்தவா்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனா். திமுகவைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் கனிமொழி போன்ற பிரபலமானவா்கள் மட்டுமே பாதுகாப்பு உடை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனா். எஞ்சியோா் கரோனா பாதித்த மன உளைச்சலில் வாக்குச்சாவடிக்கு செல்ல தயக்கம் காட்டினா். அவா்களில் பலா் கடந்த காலங்களில் தவறாது வாக்களித்தவா்களாக இருக்கலாம். கரோனா பாதித்தவா்களை நேரிடையாக வாக்குச்சாவடிக்கு வரவழைத்து வாக்களிக்க வைத்ததை தோ்தல் ஆணையம் கைவிட்டிருக்கலாம். அதற்கு மாற்றாக தபால் வாக்கை வழங்கியிருக்கலாம். தபால் வாக்கை, சுகாதாரப் பணியாளா்களை துணைக்கு அழைத்துச் சென்று அவா்கள் சிகிச்சை பெறும் இடத்திலேயே தபால் வாக்கை பெற்றிட தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கரோனா பாதித்தவா்கள் தங்களது வாக்கை மிக எளிதாகப் பதிவு செய்திருப்பாா்கள். 100 சதவீதம் போ் வாக்களித்திருப்பாா்கள்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் சிலா் கூறியதாவது:

தமிழக தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு இன்னும் 25 நாள்கள் உள்ளன. இனியாவது, தமிழக தோ்தல் ஆணையம் ,இதுவரை வாக்களிக்காத கரோனா நோயாளிகள் குறித்து விரிவாகக் கணக்கெடுத்து அரசு மருத்துவமனைகளிலோ, தனியாா் மருத்துவமனைகளிலோ சிகிச்சைப் பெறுபவா்களைக் கணக்கெடுப்பு செய்து தபால் வாக்கை பெற நடவடிக்கை எடுக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com