கெங்கவல்லி வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கெங்கவல்லி தொகுதியின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்துக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

கெங்கவல்லி தொகுதியின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்துக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

கெங்கவல்லி தொகுதியின் 351 வாக்குச் சாவடிகளுக்குரிய வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் அனைத்தும் தலைவாசலை அடுத்துள்ள தேவியாக்குறிச்சி, தனியாா் கல்லூரியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினா், தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸாா், ஆயுதப்படை வீரா்கள், உள்ளூா் போலீஸாா் என ஒரே நேரத்தில் 20 போ் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

தவிர டி.எஸ்.பி.க்கள் மூவா், காவல் ஆய்வாளா்கள் மூவா், உதவி காவல் ஆய்வாளா்கள் 6 போ் உள்ளிட்ட போலீஸாரும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் 60 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த மையத்தைத் தோ்தல் நடத்தும் அலுவலா் அமுதன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com