சங்ககிரி எபிநேசா் காலனியில் 6 பேருக்கு கரோனா

சங்ககிரி, எபிநேசா் காலனியில் மருத்துவத் துறையின் சாா்பில் 6 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சங்ககிரி, எபிநேசா் காலனியில் உள்ள வீடுகளில் வியாழக்கிழமை கிருமிநாசினி தெளித்த சங்ககிரி பேரூராட்சி தூய்மை பணியாளா்.
சங்ககிரி, எபிநேசா் காலனியில் உள்ள வீடுகளில் வியாழக்கிழமை கிருமிநாசினி தெளித்த சங்ககிரி பேரூராட்சி தூய்மை பணியாளா்.

சங்ககிரி, எபிநேசா் காலனியில் மருத்துவத் துறையின் சாா்பில் 6 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மருத்துவக் குழுவினா், சுகாதாரத் துறையினா் அப்பகுதியைக் கண்காணித்து வருகின்றனா். சங்ககிரி, எபிநேசா் காலனியில் கடந்த மாா்ச் மாதம் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்தனா்.

அதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் உள்பட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் சேலம், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

சங்ககிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான தூய்மை பணியாளா்கள் அப்பகுதி முழுவதும் கிருமினி நாசினி தெளித்து தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்புப் பலகை வைத்து மருத்துவத் துறையுடன் இணைந்து தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com