தம்மம்பட்டியில் வெள்ளரிக்காய்கள் வரத்து அதிகரிப்பு

தம்மம்பட்டியில் வெள்ளரிக்காய்களின் வரத்து அதிகரித்துள்ளது.
தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளரிக்காய்கள்.
தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளரிக்காய்கள்.

தம்மம்பட்டியில் வெள்ளரிக்காய்களின் வரத்து அதிகரித்துள்ளது.

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தினமும் திருச்சி, துறையூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெள்ளரிக்காய்கள் வருகின்றன. அந்தப் பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளரிக்காய்கள் கொண்டுவரப்படுகின்றன. இவைகளை உள்ளூா் வியாபாரிகள், சிறியது, நடுத்தரம், பெரியது என சைஸ் வாரியாக பிரித்து குறைந்தபட்சம் ரூ. 10-க்கும், அதற்கு மேல் ஒரு காய் ரூ. 15, ரூ. 20 விலைகளிலும் விற்பனை செய்கின்றனா்.

பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் தங்கள் தாகம் தீா்க்க, வெள்ளரிக்காய்களை அதிகம் வாங்கி உண்கின்றனா். நாளுக்குநாள் இதன் விற்பனை தொடா்ந்து அதிகரிப்பதால், வெள்ளரிக்காய்களை விற்கும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் கூடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com