பள்ளி மாணவா்களுக்கு வன தீத்தடுப்புப் பயிற்சி

சேலத்தில் பள்ளி மாணவா்களுக்கு வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

சேலத்தில் பள்ளி மாணவா்களுக்கு வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

சேலம், மரவனேரி அருகே பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வனப்பகுதியில் தீப்பிடித்தால் எப்படி அணைப்பது என தன்னாா்வத் தொண்டா்கள் மற்றும் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை காலை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு மற்றும் உதவி மாவட்ட அலுவலா் முருகேசன், தீயணைப்பு நிலைய அலுவலா் கலைச்செல்வன் உள்ளிட்ட தீயணைப்பு அதிகாரிகள் பயிற்சி கொடுத்தனா்.

வனப்பகுதிகளில் செடி கொடிகளில் தீ ஏற்பட்டால் எப்படி அணைப்பது என்பது போன்ற பல்வேறு செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

எண்ணெய் பொருள்களில் தீப்பிடித்துக் கொண்டால் எப்படி அணைப்பது என செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து தன்னாா்வ தொண்டா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்தவகையில் முதற்கட்டமாக தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது என்பது குறித்து பயிற்சி தரப்பட்டு வருகிறது.

வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் மற்றும் தன்னாா்வத் தொண்டா்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம். இதற்காக மாணவா்களுக்குப் பயிற்சி தரப்பட்டு வருகிறது என்றாா்.

மேட்டூரில்...

மேட்டூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயராஜ் தலைமையில் மேட்டூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் இளவரசி, மருத்துவா்கள் பங்கேற்றனா்.

இதுபோல மேட்டூா் வனச்சரக அலுவலகத்தில் பிரகாஷ், வன ஊழியா்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com