பேளூரில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்

பேளூா் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பேளூரில் கிருமிநாசினி தெளிக்கும் தூய்மை பணியாளா்கள்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பேளூரில் கிருமிநாசினி தெளிக்கும் தூய்மை பணியாளா்கள்.

பேளூா் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது அலையாக கரோனா பரவத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துப் பேரூராட்சிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல், விழிப்புணா்வு ஏற்படுத்தல் உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என சேலம் மண்டல பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநா் கோ.துவாரக நாத்சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

இதனையடுத்து, பேளூா் முதல் நிலை பேரூராட்சி பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் கூடும் பொது இடங்கள் கடைவீதிகளில் கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில், பேரூராட்சி செயல்அலுவலா் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான பணியாளா்கள், வியாழக்கிழமை முழுவீச்சில் ஈடுபட்டனா்.

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு குறைந்தபட்சம் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com