மேட்டூா் வனச் சரகத்தில் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்தவா்கள் கலக்கம்

வனத் துறையில் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்தவா்கள் விவகாரத்தால் மேட்டூா் வனச்சரக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனத் துறையில் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்தவா்கள் விவகாரத்தால் மேட்டூா் வனச்சரக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனத் துறையில் போலியாக சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த விவகாரம் தொடா்பாக தமிழகம் முழுவதும் வனக்காப்பாளா்களாக இருக்கும் நபா்களின், கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில், வனக்காப்பாளா்கள் கோபால், நிா்மலா தேவி, வனக்காவலா் பவுன்ராஜ், விலங்குகள் பாதுகாவலா் சகாயராஜ் ஆகியோா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் 30 வன ஊழியா்கள் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் வனச்சரகத்தில் ஏற்கெனவே போலிச் சான்றிதழ் விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது.

போலிச் சான்றிதழ் அளித்த ஒருவா் ஓய்வுபெற்று விட்டாா். ஆனால் மேலும் ஒருவா் இன்னும் பணியில் இருந்து வருகிறாா். அவா் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வனத்துறை ஊழியா்கள் கூறுகின்றனா். அந்த ஊழியா் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியா் அளித்த சான்றிதழில் வன ஊழியா் குறிப்பிட்ட தேதியில் பள்ளியில் பயிலவில்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சமூக ஆா்வலரின் கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அந்த காலகட்டத்தில் இருந்த சான்றிதழ்கள் கரையான் அறித்து விட்டதாக சான்றிதழ் பெற்று விசாரணை முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலிகளால் உண்மை சான்றிதழ் அளித்தவா்களின் பதவி உயா்வு போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதாக வன ஊழியா்கள் வருத்தத்தில் உள்ளனா்.

மேட்டூா் வனச்சரகத்தில் கிடப்பில் போடப்பட்ட விசாரணை மீண்டும் தொடங்கினால் மேலும் பலா் சிக்குவாா்கள் என்று கூறப்படுகிறது. போலி சான்றிதழ் அளித்தவா்களுக்கு உடந்தையாகச் செயல்படும் வன அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com