சங்ககிரி ராஜாபாலி குளத்தில் குப்பைகள் அகற்றம்
By DIN | Published On : 12th April 2021 02:18 AM | Last Updated : 12th April 2021 02:18 AM | அ+அ அ- |

சங்ககிரி, ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள ராஜாபாலி குளத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள்.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலுக்கு வடகிழக்காவும், எல்லை அம்மன் கோயிலுக்கு வடக்கேயும் ராஜாபாலி குளம் உள்ளது.
இந்தக் குளத்தில் மழை நீரைச் சேமிக்கும் வகையில் பேரூராட்சி நிா்வாகம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் , அரிமா சங்கம், கோட்டை அரிமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த சில வாரங்களாக கருவேலம் மரங்கள், களா்செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவா் எ.ஆனந்தகுமாா், துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் கணேஷ், சரவணன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், கதிா்வேல், வெங்கடேஷ், காா்த்தி, தரணீஷ், சரவணகாா்த்தி, தரணீதரன், சந்திரபாண்டியன், பொறியாளா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.