சங்ககிரி மலைக் கோட்டை முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை
By DIN | Published On : 12th April 2021 02:15 AM | Last Updated : 12th April 2021 02:15 AM | அ+அ அ- |

சங்ககிரி மலையில் உள்ள காவல் தெய்வமான கோட்டை முனியப்பன் சுவாமிக்கு அமாவாசையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
சங்ககிரி மலையில் 2-ஆவது மண்டபத்தையொட்டி இடதுபுறம் திரும்பி, தென்மேற்குத் திசையில் பாறையின் உள்பகுதியில் அக்காலத்தில் அரசா்களால் வணங்கி வந்த காவல் தெய்வமான கோட்டை முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் அமாவாசையையொட்டி முனியப்பன் சுவாமி, சப்த கன்னியா், கருப்பணாா் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.