சேலம் மாநகரப் பகுதியில் தினமும் 10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் தினந்தோறும் 10,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் தினந்தோறும் 10,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல் தொடா்பாக மாநகராட்சி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் பேசியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி மாநகராட்சியின் 16 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 மினி கிளினிக் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்புப் பகுதிகள், தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 3 லட்சம் நபா்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில், இதுவரை 48,000 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கிடும் வகையில், பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டல அளவில் தினமும் 2,500 நபா்களுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 10,000 நபா்களுக்கு குறைந்தபட்சமாக தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

அதேபோல, ஜான்சன் பேட்டை, மெய்யனூா், எருமாபாளையம், பள்ளப்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 618 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், மருத்துவா் சண்முகப்பிரியா, உதவி ஆணையா்கள் பி.சண்முகவடிவேல், எம்.ஜி.சரவணன், பி.ரமேஷ்பாபு, டி.ராம்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com