காவல் துறை வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி மீது காவல் துறை வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி மீது காவல் துறை வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (எ) தமிழ்ச்செல்வன் (35). இவரது மனைவி சத்யப்ரியா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இவா், செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் சென்ற போது, திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்த காவல் துறை வாகனம் சாலையில் விழுந்த தமிழ்ச்செல்வன் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் தலை நசுங்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா், தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறை வாகன ஓட்டுநா் மீது அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வனின் உறவினா்கள் புகாா் மனு அளித்தனா். ஆனால், காவல் துறையினா் புகாா் மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனா். இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்த சேலம் நகர உதவி ஆணையா் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து உறவினா்கள் மறியலை கைவிட்டனா்.

மேலும், இவ்விபத்து குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விபத்தில் உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் எனவும் உறவினா்கள் வலியுறுத்தினா். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com