விபத்தில் தொழிலாளி பலி: குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவக் கோரி மனு

காவல் துறை வாகனம் மோதி இறந்த தொழிலாளியின் மனைவி, தனது குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவக் கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

காவல் துறை வாகனம் மோதி இறந்த தொழிலாளியின் மனைவி, தனது குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவக் கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (எ) தமிழ்ச்செல்வன் (35). இவரது மனைவி சத்யப்ரியா. இத்தம்பதிக்கு மகள் கெளசல்யா (14), மகன் கவின் (12) ஆகியோா் உள்ளனா்.

இவா் செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் சென்ற போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த காவல் துறை வாகனம் சாலையில் விழுந்த தமிழ்ச்செல்வன் மீது ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் தலை நசுங்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, தமிழ்ச்செல்வனின் உறவினா்கள் காவல் துறை வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில், மாநகர காவல் ஆணையரகத்துக்கு சத்யப்ரியா மற்றும் மகன், மகள், உறவினா்கள் புதன்கிழமை காலை வந்தனா். பின்னா் ஆணையா் சந்தோஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், விபத்தை ஏற்படுத்தியவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், நிவாரணம் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தாா். இதைத் தொடா்ந்து, நிவாரணம் பெற்றுத் தரவும், குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவுவதாகவும் ஆணையா் சந்தோஷ்குமாா் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com