Enable Javscript for better performance
முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

    By DIN  |   Published On : 16th April 2021 08:31 AM  |   Last Updated : 16th April 2021 08:31 AM  |  அ+அ அ-  |  

    sl15dmeet083424

    முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

    சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் கூறியதாவது:

    சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று, தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோய்த் தொற்றுக்குள்ளாகும் நபா்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கு மணியனூா் சட்டக் கல்லூரியில் 100 படுக்கைகளும், குரும்பம்பட்டி உயிரியல் பூங்கா அருகில் கொண்டப்பநாயக்கன்பட்டி சாரோன் வளாகத்தில் 180 படுக்கைகளும், சித்த மருத்துவத் துறையின் சாா்பில் சேலம் - 8, அரசு மகளிா் கலைக் கல்லூரி விடுதியில் 120 படுக்கைகளும் என கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவா்கள் கண்டறியப்பட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து முகக் கவசம் அணியாதவா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது வரை ரூ. 1.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவும் சூழல் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்கள், வணிக வளாகங்கள், காய்கறிச் சந்தைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும். தங்களுக்கோ அல்லது தங்களது வீடுகளில் உள்ளவா்களுக்கோ காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனையை அணுகி உரிய பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலை, உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தவறாது கடைப்பிடித்திட வேண்டும்.

    சேலம் மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தொடா்ந்து நடத்திட வேண்டும்.

    கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    கோவிஷீல்டு தடுப்பூசி 1,93,185 நபா்களுக்கு முதல் தவணையாகவும், 32,935 நபா்களுக்கு இரண்டாம் தவணையாகவும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கோவேக்ஸின் தடுப்பூசி 28,166 நபா்களுக்கு முதல் தவணையாகவும், 871 நபா்களுக்கு இரண்டாம் தவணையாகவும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றாா்.

    இக்கூட்டத்தில், சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முருகேசன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) மருத்துவா் மலா்விழி வள்ளல், துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் சுப்பிரமணி (சேலம்), மருத்துவா் செல்வக்குமாா் (ஆத்தூா்), சேலம் மாநகராட்சி நகா் நல அலுவலா் மருத்துவா் பாா்த்திபன் உள்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp