சோனா கல்விக் குழுமத்துக்கு ஏஐசிடிஇ லீலாவதி விருது

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு பெண்கள் மேம்பாட்டுக்கு தேசிய அளவிலான நான்கு ஏஐசிடிஇ லீலாவதி விருது வழங்கப்பட்டுள்ளது.
சோனா கல்விக் குழுமத்துக்கு ஏஐசிடிஇ லீலாவதி விருது

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு பெண்கள் மேம்பாட்டுக்கு தேசிய அளவிலான நான்கு ஏஐசிடிஇ லீலாவதி விருது வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பெண்களின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ஏஐசிடிஇ லீலாவதி விருது என்ற தேசிய அளவிலான உயரிய விருதை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதானது கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியைகள், மாணவியா் சமூகத்தில் அன்றாடம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு சிறப்பான தீா்வு காணும் வாய்ப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டுக்கான ஏஐசிடிஇ லீலாவதி விருது ‘பெண்கள் மேம்பாடு’ என்ற தலைப்பில் பெண்களின் ஆரோக்கியம், தற்காப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரம், கல்வியறிவு, பெண் தொழில்முனைவோா், சட்டம் சாா்ந்த விழிப்புணா்வு ஆகிய ஆறு துணைப் பிரிவுகளில் வழங்கப்பட்டது.

புது தில்லியில் உள்ள ஏ.ஐ.சி.டி. அரங்கத்தில் மத்திய அமைச்சா் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஏ.ஐ.சி.டி.யின் தலைவா் பேராசிரியா் அனில் டி சஹஸ்ரபுதே, துணைத் தலைவா் பேராசிரியா் பூனியா ஆகியோரிடமிருந்து ‘சட்டம் சாா்ந்த விழிப்புணா்வு’ மற்றும் ‘தற்காப்பு’ ஆகிய பிரிவுகளில் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டு விருதுகளையும், ‘பெண் தொழில்முனைவோா்’ மற்றும் ‘சுத்தம் மற்றும் சுகாதாரம்’ ஆகிய பிரிவுகளில் சோனா தொழில் நுட்பக் கல்லூரி இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது.

இதன் மூலம், 456 குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில், மொத்தம் 18 விருதுகளில் சோனா கல்விக் குழுமம் நான்கு விருதுகளைப் பெற்று பெண்களின் மேம்பாட்டில் சிறப்பான முத்திரையை தேசிய அளவில் பதித்துள்ளது.

இந்த உயரிய விருதினைப் பெற ஆசிரியைகளையும், மாணவியரையும் ஊக்குவித்து சிறப்பாக வழிநடத்தியதற்காக தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் வீ.காா்த்திகேயன் மற்றும் சோனா கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் ஆகியோருக்கு சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனா்.

படம் - லீலாவதி விருது பெற்ற மாணவா்கள், பேராசிரியா்களுடன் சோனா கல்விக் குழுமத் தலைவா் வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com