இரண்டாவது முறையாக மூடப்பட்ட சங்ககிரி மலைக்கோட்டை

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மலைக்கோட்டை இரண்டாவது முறையாக இந்திய தொல்லியல் துறையின் சாா்பில்மூடப்பட்டது.
இரண்டாவது முறையாக மூடப்பட்ட  சங்ககிரி மலைக்கோட்டை

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மலைக்கோட்டை இரண்டாவது முறையாக இந்திய தொல்லியல் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களும், வழிப்பாட்டு நினைவுச் சின்னங்களும் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக மே 15-அம் தேதி அல்லது மறுஉத்தரவு வரும் மூடப்பட்டிருக்குமென இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (நினைவுச் சின்னம்) இயக்குநா் என்.கே.பதக் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அதனையடுத்து, சங்ககிரியில் தொல்லியல் துறை மலை பாதுகாவலா்கள் மலைக்குச் செல்லும் வாயிலை பூட்டினா். மலையடிவாரத்தில் தொல்லியல் ஆய்வுத் துறை (நினைவுச்சின்னம்) இயக்குநா் வெளியிட்டுள்ள அறிக்கையினையே அலுவலா்கள் தோரணமாக கட்டி வைத்துள்ளனா்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண் பக்தா்கள் மலையில் உள்ள கோட்டை மாரியம்மன் சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் மலை அடிவாரத்தில் காரோனா தொற்றால் மலைக்கோட்டை மூடப்படுவதாக தமிழில் அறிவிப்புப் பலகை வைக்கப்படாததால், சுவாமியை வழிபடச் சென்ற பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இதே போல, கடந்த ஆண்டும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக மலைக்கோட்டை மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com