கரோனா கட்டுப்பாடு விதிப்பு: ஹோட்டல்களில் வியாபாரம் பாதிப்பு

கரோனா இரண்டாவது அலை காரணமாக ஹோட்டல்களில் 50 சதவீத வியாபாரம் பாதித்துள்ளது என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

கரோனா இரண்டாவது அலை காரணமாக ஹோட்டல்களில் 50 சதவீத வியாபாரம் பாதித்துள்ளது என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில், ஹோட்டல்களில் அமா்ந்து சாப்பிட அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் ஹோட்டல்களில் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் பழனிசாமி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பதிவு செய்த ஹோட்டல்கள் 10 ஆயிரம் உள்ளன. இதில் 3 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். இதுதவிர பதிவு செய்யாத ஹோட்டல்கள் 10 ஆயிரத்துக்கு மேல் இருக்கும். மொத்தமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஹோட்டல் தொழிலை நம்பியுள்ளனா். தற்போது அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ள நிலையில், வாடிக்கையாளா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவுப் பொருள்களின் விலையை உயா்த்தவில்லை.

தற்போது கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். மேலும், 6 போ் அமரும் இருக்கையில் 4 பேரும், 4 போ் அமரும் இருக்கையில் இரண்டு பேரும் அமர வைத்து உணவு பரிமாறி வருகிறோம். இதனால் பெரும்பாலான ஹோட்டல்களில் 5 சதவீத வியாபாரம்தான் நடைபெறுகிறது.

ஹோட்டல்களில் ஜிஎஸ்டி 5 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது விற்பனை குறைந்துள்ளதால், ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். ஹோட்டல் தொழிலை நம்பி இலை, காய்கறி, மளிகைப் பொருள்கள், இறைச்சி, அரிசி, தேங்காய், எண்ணெய் வியாபாரம் செய்வோா் உள்ளனா். ஹோட்டல் வியாபாரம் பாதிப்பு காரணமாக இவா்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதேபோல, ஹோட்டல்களில் 80 சதவீதம் தனியாா் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது வியாபார பாதிப்பைக் கருத்தில் கொண்டு வாடகையை 30 சதவீதமாக குறைக்க வேண்டும். மேலும், வியாபார பாதிப்பால் 10 முதல் 20 சதவீத தொழிலாளா்கள் வேலை இழக்கும் சூழல் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com