கரோனா தடுப்பு நடவடிக்கை:ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடி பகுதியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கை:ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடி பகுதியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் தனலிங்கம் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், வருவாய் அலுவலா்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா், காவல் துறை அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பகுதியில் பொதுமக்களிடையே கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வை அதிகரித்தல், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல், தடுப்பூசி குறித்த நம்பிக்கையினை பொதுமக்களிடம் அதிகரித்தல், நகா் பகுதியில் நடைபெறும் சுகாதாரப் பணிகளை மேம்படுத்துதல், வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வாழப்பாடியில்...

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சேலம் துணை ஆட்சியா் (ஆய்வு) அமிா்தலிங்கம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், வட்டாட்சியா் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், துணை வட்டாட்சியா்கள் நீதி செல்வம், ஜெயலஷ்மி மற்றும் சுகாதாரத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணிந்து வரவும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்தவும், கரோனா அறிகுறி உள்ளவா்களுக்கு பரிசோதனை செய்யவும், வட்டாரங்கள் தோறும் கரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

விழிப்புணா்வுக்கு பிறகும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கவும், முறையாக கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com