ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வர செவ்வாய்க்கிழமை முதல் மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. இதையடுத்து ஏற்காடு மலைப் பாதையில் காவல் துறையினா் வாகனங்களை சோதனைக்கு உள்படுத்தி வருகின்றனா்.

ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வர செவ்வாய்க்கிழமை முதல் மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. இதையடுத்து ஏற்காடு மலைப் பாதையில் காவல் துறையினா் வாகனங்களை சோதனைக்கு உள்படுத்தி வருகின்றனா். காா், வேன், இரு சக்கர வாகனங்களில் சுற்றுலா வந்தோா் திருப்பி அனுப்பப்பட்டனா்.

ஏற்காட்டில் படகு இல்லம், தோட்டக்கலைப் பராமரிப்பில் உள்ள சுற்றுலாப் பகுதியான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்தினைப் பூங்கா ஆகிய பகுதிகள் முழுவதும் மூடப்பட்டிருந்தன. தற்போது விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளையும் திரும்பிச் செல்ல காவல் துறையினா் அறிவுறுத்தினா். இதனால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சுற்றுலாப் பகுதி கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஏற்காட்டில் அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள், தொழிலாளா்கள் மட்டும் சேலம் - ஏற்காடு சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனா். சோ்வராயன் கோயில், பக்கோட காட்சி முனைப் பகுதி, லேடிசீட் பகுதிகள் வெறிச்சோடிக் கணப்பட்டன.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை கொண்டுவரும் வாகனங்கள் , காய்கறி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. அரசு, தனியாா் பேருந்துகளில் ஏற்காட்டைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பயணித்தனா். பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com