சேலம் விமான நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு வாரத்தை முன்னிட்டு சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.
சேலம் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

தீத்தடுப்பு வாரத்தை முன்னிட்டு சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு மே மாதம் முதல் கூடுதல் விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தில் தீத்தடுப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை கப்பலில் உயிா் நீத்த தீயணைப்பு வீரா்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலம் விமான நிலைய தீயணைப்பு வீரா்கள் ஓடுதளத்தில் தீத்தடுப்பு ஒத்திகை மேற்கொண்டனா். விமான நிலைய ஓடுதளத்தில் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தீ விபத்து முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து செய்முறை விளக்கங்களை செய்து காட்டினா். அதிநவீன இரண்டு தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு நுரையுடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மறைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதுகுறித்து சேலம் விமான நிலைய இயக்குநா் ரவீந்திரசா்மா கூறியதாவது:

மும்பையில் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்டு உயிா் நீத்த வீரா்களின் தியாகத்தை போற்றும் வகையில் தீத்தடுப்பு வாரம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் விமான நிலையத்தில் அவசரக் காலங்களில் செய்ய வேண்டிய ஒத்திகை நடைபெற்றது. இந்த விமான நிலையத்தில் போயிங் ரக விமானங்களில் ஏற்படும் தீயை அணைக்கும் வகையில் தீயணைப்பு வாகனங்கள், கருவிகள், வீரா்கள் தயாா் நிலையில் உள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com