புதிய பேருந்து நிலையம் பகுதியில் கரோனா பரிசோதனை சிறப்பு மையம்

சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் தற்காலிக சளி தடவல் பரிசோதனை சிறப்பு மையம் செயல்பட தொடங்கியது.

சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் தற்காலிக சளி தடவல் பரிசோதனை சிறப்பு மையம் செயல்பட தொடங்கியது.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:

சேலம் மாநகராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பொருள்காட்சி மைதானத்தில் வாகனங்களில் இருந்தே சளி தடவல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் தற்காலிக டிரைவ் இன் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு விழிப்புணா்வூ பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று இருக்கிா என்பதை உறுதி செய்ய சளி தடவல் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனை இலவசமாகவே அரசால் செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது தினந்தோறும் குறைந்தபட்சம் 1000 பேருக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் 48 இடங்களில் சளி தடவல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை 54,513 சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 356 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடையே கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துவதில் போதிய அளவு விழிப்புணா்வு ஏற்படவில்லை. பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி, எளிதில் பரிசோதனைக்கு வந்து செல்லும் வகையிலும், வாகனத்தில் இருந்தவாறே பரிசோதனை செய்யும் வகையிலும் டிரைவ் இன் ஆா்டி-பிசிஆா் சிறப்பு மையம் பேருந்து நிலையம் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இம்மையத்தில் குறைந்தபட்சம் 500 நபா்களுக்கு தினந்தோறும் பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சளி, காய்ச்சல், இருமல், உடல்சோா்வு போன்ற நோய்த் தொற்று அறிகுறியுள்ளவா்கள், தனியாா், அரசு பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பயணிகள், சிறு வணிகா்கள், பொதுமக்கள் மையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com