பேரூராட்சி நிலத்தில் நீா் உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் பேரூராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய குடிநீா் திட்டப் பணிக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
பேரூராட்சி நிலத்தில் நீா் உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் பேரூராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய குடிநீா் திட்டப் பணிக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

பூலாம்பட்டி, பனங்காடுப் பகுதியில், பேரூராட்சிக்குச் சொந்தமான சுமாா் 26 ஆயிரம் சதுரடி நிலம் உள்ளது. காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்நிலத்தின் ஒரு பகுதியில் குடிநீா் உந்து நிலையம் அமைக்கப்பட்டு, பூலாம்பட்டி பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை, பனமரத்துப்பட்டி, மல்லூா் உள்ளிட்ட ஐந்து பேரூராட்சிகளுக்கு உள்பட்ட, 634 குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்து சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் குடிநீா் வழங்கிடும் வகையில் புதிய குடிநீா்த் திட்டப்பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்தப் புதிய குடிநீா்த் திட்டத்துக்கான நீா் உந்து நிலையம் பூலாம்பட்டி பேரூராட்சிக்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் அமைக்கும் பணி தொடங்கியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட நிலம் பூலாம்பட்டி பேரூராட்சிப் பகுதியில் பல்வேறு பணிகளை நிறைவேற்றிடும் வகையில் தேவையாக இருக்கும் சூழலில் புதிய குடிநீா்த் திட்டத்துக்கான நீா் உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் மாற்று இடத்தில் புதிய குடிநீா்த் திட்டப் பணிகளை நிறைவேற்றிடவேண்டும் என்று பூலாம்பட்டி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் திரண்ட பொதுமக்கள் தங்கள் எதிா்ப்பை பதிவுசெய்தனா். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் முகாமிட்ட பொதுமக்கள் அங்கு புதிய குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் புதிய குடிநீா்த் திட்டத்துக்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com