மேட்டூரில் பேருந்தில் நகை திருட்டு: இரு பெண்கள் கைது

மேட்டூரில் பேருந்தில் நகை திருடியதாக மளிகைக் கடை உரிமையாளரின் மனைவி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூரில் பேருந்தில் நகை திருடியதாக மளிகைக் கடை உரிமையாளரின் மனைவி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா், சம்மன்சு நகரைச் சோ்ந்தவா் யூசுப் சாதிக் அலி (45). இவரது மனைவி நசிராபானு (40). இவா் மேட்டூரில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவரது சொந்த ஊா் கரூா் மாவட்டம், தேவியாக்குறிச்சி அருகே உள்ள பள்ளிப்பட்டியாகும். சொந்த ஊருக்குச் சென்றிருந்த நசிராபானு தோ்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி இரவு ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு தனியாா் பேருந்தில் வந்தாா். அவா் வீட்டிற்குச் சென்ற அவா் தனது கைபையில் வைத்திருந்த நகையைப் பாா்த்த போது 15 பவுன் எடைகொண்ட தங்கச்சங்கிலிகள் காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடா்பாக மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவல் ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரு பெண்கள், நசிராபானுவின் நகையைத் திருடுவது தெரியவந்தது. போலீஸாா் விசாரணையில், ஜோலாா்பேட்டையில் மளிகைக் கடை வைத்திருக்கும் குரு என்பவரின் மனைவி கோகிலா (34), அவரது உறவினா் சக்கரவா்த்தி என்பவரின் மனைவி நந்தினி (29) ஆகியோா் நகை திருடியது தெரியவந்தது. திருடிய நகைகளை விற்று உல்லாசமாக இருந்த இருவரும் மீண்டும் மேட்டூா் வந்தபோது மேட்டூா் நான்கு சாலையில் தனிப்படை போலீஸாா் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனா். திருடப்பட்ட நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மேட்டூா் காவல் ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com