புதுவை என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் சேலம் கோயிலில் வழிபாடு

புதுச்சேரி என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

புதுச்சேரி என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

சேலம், சூரமங்கலத்தில் அப்பா பைத்தியம் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனிக்கிழமை இரவு புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளா்கள் வந்தனா். பின்னா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ரங்கசாமி பங்கேற்றாா்.

சுமாா் இருபது நிமிட நேர சிறப்பு பூஜைக்குப் பிறகு, ரங்கசாமி கோயிலைச் சுற்றி வலம் வந்து வணங்கினாா். இதன் பின்னா் அவரது ஆதரவாளா்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

படம் - சேலம், சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி ஆலயத்தில் சனிக்கிழமை இரவு தரிசனம் செய்த புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com