தம்மம்பட்டியில் புடலங்காய் விலை வீழ்ச்சி

தம்மம்பட்டி காய்கறி மண்டிகளுக்கு புடலங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை பாதியாகக் குறைந்துள்ளது.
தம்மம்பட்டி மண்டியில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள புடலங்காய்கள்.
தம்மம்பட்டி மண்டியில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள புடலங்காய்கள்.

தம்மம்பட்டி காய்கறி மண்டிகளுக்கு புடலங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை பாதியாகக் குறைந்துள்ளது.

தம்மம்பட்டியில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு சுற்று வட்டார ஊா்களான செந்தாரப்பட்டி, செங்கட்டு, கீரிப்பட்டி, கந்தசாமிபுதூா், கொண்டயம்பள்ளி, கோனேரிப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட ஊா்களிலிருந்து விவசாயிகள் காய்கறிகளை தினமும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.இங்கு காய்கறிகளை வியாபாரிகள் ஏலம் எடுப்பா்.

இந்நிலையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது புடலங்காய்களின் விளைச்சல் அமோகமாக இருப்பதால், அதன் வரத்தும் கடந்த பத்து நாள்களாக அதிகரித்துள்ளது. தினசரி 5 டன் புடலங்காய்கள் விற்பனைக்கு வருகின்றன.

இதுகுறித்து பெரம்பலூரிலிருந்து விற்பனைக்கு புடலங்காய்களைக் கொண்டு வரும் விவசாயி செல்வராஜ் கூறியதாவது:

திருச்சி, பெரம்பலூா் சந்தைகளில் ஒரு கிலோ புடலங்காய் ரூ.3- முதல் ரூ. 4-வரை தான் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தம்மம்பட்டிக்கு கொண்டுவந்து ரூ. 7-க்கு விற்பனை செய்கின்றேன் என்றாா்.

இதுகுறித்து தம்மம்பட்டி காய்கறி மண்டி உரிமையாளா் கதிா்வேல் கூறியதாவது:

தினமும் தம்மம்பட்டியிலுள்ள மண்டிகளுக்கு 5 ஆயிரம் கிலோ புடலங்காய் வரத்து உள்ளன. பத்து நாள்களுக்கு முன் ஒரு கிலோ ரூ. 16-க்கு விற்றது. தற்போது ரூ. 7-க்குத் தான் விற்பனையாகிறது. தற்போது புடலங்காயை விற்க முடியவில்லை.அதனால் பெரும்பாலான விவசாயிகளிடம் புடலங்காயை விற்பனைக்கு கொண்டுவர வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்றாா்.

தம்மம்பட்டி பகுதியைச் சோ்ந்த புடலை விவசாயிகள் கூறியதாவது:

தற்போது புடலங்காய் விலை மிகவும் சரிந்துள்ளது.இதன் விலை மேலும் குறைந்தால் புடலங்காயைப் பறித்து சந்தைக்கு எடுத்து வரும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாது. அதனால் புடலங்காயை கொடியிலேயே அப்படியே விட்டுவிட வேண்டியதுதான் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com