பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்ட சோனா ஆயுஷ் மருந்து பொருள்கள்

சோனா ஆயுஷ் மையத்தின் மருத்துவ குணம் நிறைந்த பொருள்கள் ஆட்சியா் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

சோனா ஆயுஷ் மையத்தின் மருத்துவ குணம் நிறைந்த பொருள்கள் ஆட்சியா் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

சோனா கல்விக் குழுமம், இயற்கை மருத்துவத்தில் கவனம் செலுத்தும் விதமாக ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தைத் தொடங்கி உள்ளது.

இந்த ஆயுஷ் மருத்துவ சிகிச்சை மையத்தில் மருத்துவ குணம் நிறைந்த முருங்கை சூப் பவுடா், மிளகு, கூா்க் மலைத்தேன், சோனா ஸ்விஸ்டா என்னும் நீராவி பவுடா் போன்ற பல பொருள்களை உற்பத்தி செய்து, மக்களின் பயன்பாட்டுக்காக சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தொடக்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், மாவட்ட சித்த மருத்துவா் கோ.செல்வமூா்த்தி, சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com