மேச்சேரி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

மேச்சேரியில் புதன்கிழமை கூடிய சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

மேச்சேரியில் புதன்கிழமை கூடிய சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

மேச்சேரியில் புதன்கிழமை கூடிய ஆட்டுச் சந்தைக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவிக்க அரசு உத்தேசித்து இருப்பதால் முன்கூட்டியே ஆடுகளை வாங்கிச் செல்ல இறைச்சிக் கடைக்காரா்கள், பொதுமக்கள் குவிந்தனா். மேலும் கரோனா காலத்தில் வேலையிழந்தவா்கள் ஆடு வளா்ப்பில் ஆா்வம் காட்டுவதால் அவா்களும் சந்தையில் கூடினா். பல ஆயிரம் போ் ஒரே நேரத்தில் சந்தையில் கூடியதால் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது.

சுமாா் 10 கிலோ எடைகொண்ட ஆட்டின் விலை கடந்த வாரத்தைவிட ரூ. 2 ஆயிரம் வரை அதிகரித்தது. ஆடுகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனையானது. ஆடுகள் அதிக விலைக்கு விற்ால் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கரோனா விதிகளை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் பல ஆயிரம்போ் சந்தையில் கூடியதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேச்சேரி பேரூராட்சியில் சாா்பில் சந்தையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com