பூலாம்பட்டியில் ஆடிப் பெருக்கு விழாவுக்குத் தடை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூலாம்பட்டி பகுதியில் ஆடிப் பெருக்கு விழாக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெறிச்சோடிய பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதி.
வெறிச்சோடிய பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதி.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூலாம்பட்டி பகுதியில் ஆடிப் பெருக்கு விழாக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள காவிரிக் கரைப் பகுதிகளில், பெரும் திரளானோா் நீராடி சுவாமி வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள காவிரிக் கரையோரங்களில் புனித நீராடவும் , வழக்கமான ஆன்மிக செயல்பாடுகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

அதன்படி செவ்வாய்க்கிழமை வரை பூலாம்பட்டி காவிரி கடைமடை பகுதி, படகுத் துறை, பரிசல் துறை, படித் துறை, கைலாசநாதா் ஆலயம், நந்திகேஸ்வரா் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள்கூடவே, புனித நீராடி ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த மூன்று நாள்களுக்கு பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்,கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்,உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com