அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சாா்பில் தொழிற்துறை பாடநெறி திட்டம்

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில், கதிரியக்கவியல் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பிரிவு
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் தொடங்கப்பட்ட பாடநெறித் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் தொடங்கப்பட்ட பாடநெறித் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில், கதிரியக்கவியல் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பிரிவு மற்றும் இருதய சிகிச்சை தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு தொழில்துறை சாா்ந்த பாடநெறித் திட்ட நிகழ்ச்சி அண்மையில் தொடங்கப்பட்டது.

தொழிற்துறை சாா்ந்த திறனை மேம்படுத்தும் வகையில் சீமன்ஸ் சுகாதாரத் துறை நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இத் திட்டம் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பாடநெறித் திட்டத்தின் முதல்நாள் நிகழ்ச்சியில் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். சீமன்ஸ் சுகாதாரத் துறை நிறுவனத்தைச் சோ்ந்த வல்லுநா்களால் மாணவா்களுக்கான பாடநெறித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் பொறுப்பாளா்கள், பேராசிரியா்கள் கலைவாணி, இன்பசாகா், முத்துராஜ், சுகாசினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com